ஏப்ரல் 6
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன(1896)!!
1896ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி முதன் முதலாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன.
ஒலிம்பிக் போட்டியானது, கி.மு. 776 முதல் கி.பி. 393 வரை கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியாவில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் 1894ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக் குழு மூலமாக 1896ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த போட்டி கிரேக்கில் உள்ள ஏதேன்ஸ் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 200 நாடுகள் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த போட்டிகள் பல பிரிவினருக்கும் நடக்கின்றது.
அதாவது, ஆண், பெண் பிரிவினர் மட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள், இளையோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் என பிரிக்கப்பட்டுள்ளது.
1896ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை (உலகப் போர் நடைபெறாத ஆண்டுகளில்) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்:
1814 - மாவீரர் நெப்போலியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1869 - செல்லுலாய்ட் (பிளாஸ்டிக்) கண்டுபிடிக்கப்பட்டது.
1917 - முதலாம் உலகப்போரில் ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போர் அறிவித்தது.
.jpg)
No comments:
Post a Comment