Thursday, 2 April 2015

குடி போதையில் சிங்கத்திடம் சண்டைக்கு போன சிறுவன்: மீட்ட பூங்கா ஊழியர்கள்


இந்தியாவில் வனவிலங்குப் பூங்காவில் சிங்கம், புலி, போன்ற ஊனுன்னி விலங்குகள் என்றாலே மக்களுக்கு ஒரு வித பயம் உண்டாகி இருக்கிறது.
காரணம், கடந்த 2014ம் ஆண்டு டெல்லி உயிரியல், வாலிபர் ஒருவர் தவறிப் போய் புலிகள் வாழிடத்தில் விழுந்து புலிகளால் கொல்லப்பட்ட சம்பவம், தொடர்ந்து இந்த வருடம், பெங்களூரு உயிரியல் பூங்காவில், உணவு வைக்கச் சென்றவரை சிங்கம் தாக்கியது.
இதனால், உயிரியல் பூங்காவுக்குச் செல்லும் பலர் சிங்கம் புலியை எட்ட நின்றே ரசித்து வருகின்றனர். இந்நிலையில், அகமதாபாத் உயிரியல் பூங்காவில், 17வயதே ஆன சிறுவன் ஒருவன் செய்த வேலை அனைவரையும் பதைபதைக்கச் செதுள்ளது.
முழுக்க குடித்திருந்த அந்த சிறுவன், சிங்கத்தை கொல்லப்போவதாக கத்திக் கொண்டு சிங்கம் இருந்தக் கூண்டுக்குள் குதித்துள்ளார். இதைக் கண்ட வன விலங்கு பூங்கா ஊழியர்கள், மற்றும் சுற்றிய இருந்த பார்வையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
உள்ளே விழுந்த சிறுவன், பாதுகாப்பிற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த குழியினுள் விழுந்தார். இதனால், விரைந்து வந்த வனவிலங்கு பூங்கா ஊசியர்கள் சிறுவனை மீட்டனர். மீட்டு வந்த சிறுவன் போதை தெளிந்ததும், வழக்கமான குடிகாரர்களைப் போல், நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டுள்ளான்.
இது குறித்து பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கையில், சிறுவன் தவறி பள்ளத்தில் விழுந்தார், அதோடு சிங்கங்கள் மேலே தூங்கிக் கொண்டிருந்தன. அதனால் தான் அவரை எளிதாக உயிருடன் மீட்க முடிந்தது என்று கூறியுள்ளனர்.
போலீஸார் சிறுவனைக் கண்டித்து அனுப்பியதோடு, அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளில், வன விலங்கு பூங்காக்களில் விலங்குகளால் மனிதர்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment