பல தடைகளை தாண்டி வெளிவந்திருக்கும் படம் கொம்பன். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள இப்படம் வெளிவந்தால் தென் மாவட்டங்களில் சாதி கலவரம் வெடிக்கும் என கூறி படத்திற்கு தடை வித்திக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் அந்த வழக்கு தள்ளிப்படிச் செய்யப்பட்டு படம் ரிலீஸாகி விட்டது.
இந்நிலையில் 'கொம்பன்' படத்தின் பிரச்சனைக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என சிலர் செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த செய்தி தவறானது என்றும் கொம்பன் படப்பிரச்சனையில் தன்னை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் கொம்பன் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் உதயநிதி ஸ்டாலின் தான் தடுக்கிறார் என்றும், டாக்டர் கிருஷ்ணசாமியை தூண்டுவிட்டு வேடிக்கை பார்ப்பதே திமுக தானாம் என்றும் சர்ச்சைகள் கிளம்பியது.
இதற்கு காரணமாக உதயநிதி ஸ்டாலினின் இரண்டாவது படமான 'இது கதிர்வேலன் காதல்' படம் தோல்வியடைந்ததால் இப்போது அவர் நடித்து வெளிவர உள்ள 'நண்பேன்டா' படம் வெற்றி பெற்றால்தான் அவர் திரையுலகத்தில் தொடர்ந்து நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். அதனால், இந்தப் படம் வரும் போது அவர் எந்த போட்டியையும் விரும்பவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இந்த செய்தி தவறானது என்றும் கொம்பன் படப்பிரச்சனையில் தன்னை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தன்னுடைய 'நண்பேண்டா' படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு மாதத்திற்கு முன்பே உறுதி செய்து, தமிழகம் முழுவதும் 275 தியேட்டர்களை புக் செய்து ஒப்பந்தமும் செய்துகொண்டதாகவும், கொம்பன் படத்தின் ரிலீஸ் தன்னுடைய படம் ரிலீஸாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவோ அல்லது குறையவோ வாய்ப்பில்லை என்றும், இதனால் கொம்பன் படத்தின் பிரச்சனையில் தன்னை இழுத்து விளம்பரம் தேட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கிருஷ்ணசாமி ஒரு மாதத்திற்கு முன்பே சென்சார் போர்டுக்கும், எஸ்.வி.சேகருக்கும் இந்த படம் குறித்து தனது எதிர்ப்பை மனு மூலம் தெரிவித்துள்ளார் என்றும் அந்த சமயத்தில் கொம்பன்' படத்தின் ரிலீஸ் தேதி கூட உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறிய உதயநிதி, விஷமத்தனமாக இந்த பிரச்சனையில் தன்னுடைய பெயரை இழுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment