உதயநிதி-சந்தானம்-ஹாரிஸ் கூட்டணியின் 3-வது படம். உதயநிதி- நயன்தாரா கூட்டணியின் 2-வது படம் என்று பெரிய எதிர்பார்ப்புடன் களம் இறங்கியது இந்த நண்பேன்டா படம்.
இதில் இன்னொரு சிறப்பம்சமாக கருணாகரனும் இணைந்துள்ளார். இயக்குநர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த ஜெகதீஷ் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா..? என்று பார்ப்போம்...
படம் ஆரம்பிக்கும்போதே உதயநிதியும்-சந்தானமும் மத்திய சிறைச்சாலையில் கைதியாக இருக்கிறார்கள். இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்ற ப்ளாஷ்பேக்கோடு ஆரம்பிக்கிறது படம். கதைப்படி நாயகன் உதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்.
இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். வேலை வெட்டி எதுவும் இல்லாததால் மாதாமாதம் சந்தானத்துக்கு சம்பளம் போடும் சமயம் பார்த்து திருச்சிக்கு சென்று அவருடைய பணத்தில் ஊர் சுற்றி, ஜாலியாக பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்து வருகிறார் உதயநிதி.
அதுபோல், ஒருமுறை திருச்சிக்கு போயிருக்கும்போது அங்கு நயன்தாராவை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல் வயப்படுகிறார். ஆனால், நயன்தாராவோ இவரது காதலை கண்டுகொள்வதாக இல்லை. நாளடைவில் நயனும் உதயநிதியை காதலிக்கிறார். ஒரு நாள் நயன்தாரா தான் ஒரு முன்னாள் கைதி என்று காதலனிடம் உண்மையை கூற அவர் அதை கிண்டலடிக்கிறார்.
ஒரு முறை கைதியாக ஜெயிலில் இருந்து பார் என் வலி புரியும் என காதலை உதாசீனப்படுத்தி பிரிந்து செல்கிறார் நயன்தாரா. இந்நிலையில் உண்மையாகவே செய்யாத குற்றத்திற்காக உதயநிதியும் சந்தானமும் ஜெயிலுக்கு செல்ல நேரிடுகிறது. அப்படியென்றால் நிஜமான குற்றவாளி யார்? இவர்கள் ஏன் சிறை செல்ல நேரிட்டது? பிரிந்து சென்ற காதலி கிடைத்தாளா? இது போன்ற கேள்விக்கான விடைதான் ‘நண்பேன்டா’.
முன்பு நடித்த படங்களை காட்டிலும் இதில் சற்று தேறியிருக்கிறாராம் உதயநிதி. டான்சுடன் சேர்ந்து பைட்டும் செய்திருக்கிறார். இடைவேளை வரை சந்தானம்-உதயநிதி காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.
No comments:
Post a Comment