தென்னிந்திய சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் பாலிவுட் படம் மீதான வழக்கில் ரஜினிகாந்த் வென்றதை அடுத்து படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
மும்பையின் வர்ஷா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள “மெயின் ஹூ ரஜினிகாந்த்”. இத்திரைப்படத்தின் தலைப்பில் மட்டுமல்லாது, ஒரு கதாபாத்திரத்தின் நடை உடை பாவனை அனைத்திலும் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார்.
இந்த கதாபாத்திரம் ரஜினிகாந்தை தவறாகச் சித்தரிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாம். இதனால், ரஜினிகாந்த், இந்த திரைப்படத்திற்கு தடை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரஜினி காந்த் அளித்த புகார் மனுவில்,
”ஒழுங்கீனமற்ற முறையில் அந்த கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய சினிமா துறையில் எனக்கு உள்ள மரியாதை, நற்பெயர் அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில், எனது பெயரை வைத்து முற்றிலும் முரணாக ஒரு படத்தை வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. அதனால், மெயின் ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து உயர்நீதிமன்றம், படத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து படக்குழு மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ரஜினிக்கு சாதகமாக முடிந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:
’ரஜினிகாந்தின் பெயர், தோற்றம், வசன உச்சரிப்பு போன்றவைகளைப் பயன்படுத்த மாட்டோம் எனவும், "மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற படத்தின் தலைப்பை மாற்றி நீக்கி விடுகிறோம் எனவும் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.’
‘இந்த உத்தரவாதம் பதிவு செய்யப்படுகிறது. தலைப்பை மாற்றுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் 10 நாள்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். மேலும், ரஜினிகாந்த், அவரது குடும்பத்தினர் தொடர்பாக இடம்பெற்றுள்ள காட்சிகளையும் நீக்க வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதால் வழக்கை முடித்து வைக்கிறோம்.'
No comments:
Post a Comment