4 வயதான குழந்தையொன்று அதிகாலை 3 மணியளவில் தனியாக பயணிகள் பஸ் ஒன்றில் ஏறியதைக் கண்டு போலிஸாரை ஓட்டுநர் வரவழைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பிலடெல்பியா மாநிலத்தைச் சேர்ந்த இச்சிறுமி, தனது அபிமான குளிர்பானம் ஒன்றை வாங்குவதற்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏறியதாக தெரிவித்துள்ளாள். இச்சிறுமி பஸ்ஸில் ஏறிய காட்சி கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன.
(வீடியோ கீழே)
4 வயதான சிறுமி மட்டும் அதுவும் அதிகாலை 3 மணியளவில் பஸ்ஸில் ஏறியமை ஓட்டுநருக்கும் ஏனைய பயணிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சிறுமியை விசாரித்த ஓட்டுநரான ஹார்லன் ஜெனிபர், உடனடியாக பஸ்ஸை நிறுத்தி, போலிஸாருக்கு தகவல் கொடுத்தார். "அச்சிறுமி தான் எங்கே செல்கிறாள் என்பதை நன்றாக அறிந்திருந்தாள்.
அவள் ஏற்கெனவே இவ்வழியே பயணம் செய்திருக்க வேண்டும். எனக்கும் குழந்தைகள் உண்டு. ஏனைய தந்தைமார் செய்வதையே நானும் செய்தேன்" என ஓட்டுநர் தெரிவித்துள்ளார். மேற்படி சிறுமியை அவளின் பெற்றோரிடம் போலிஸார் ஒப்படைத்தனர்.
(வீடியோ கீழே)
No comments:
Post a Comment