கடந்த வருடம் அமலா பாலை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலான இயக்குநர் விஜய் தற்போது சைலண்டாக ஒரு படத்தை இயக்கிவருகிறார். தலைவா, சைவம் என தொடர் தோல்விகளை கொடுத்த விஜய் சிறிது கால ஓய்வுக்கு பிறகு விக்ரம் பிரபுவை வைத்து 'இது என்ன மாயம்' என்ற படத்தை இயக்கிவருகிறார்.
இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதிகா சரத்குமாரின் 'மேஜிக் பிரேம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே மே 1ஆம் தேதி சூர்யாவின் மாஸ்' ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது அந்த படத்துடன் விஜய் பிரபுவின் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக விரைவில் நடைபெறும் என்றும், இசை வெளியீட்டு தேதி இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment