வெனிசூலாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மெல்லிய இடையுடன் தோற்றமளிப்பதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக தினமும் 23 மணி நேரங்கள் கோர்செட் (corset) எனும் ஆடையை தான் அணிந்துகொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பலரும் மெல்லிய இடையுடன் இருப்பதை விரும்புவர். ஆனால், 25 வயதான அலெய்ரா அவென்டனோ எனும் இந்த பெண் 20 அங்குலம் மட்டும் சுற்றளவுடைய இடையை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாடலாக பணிபுரியும் அலெய்ரா, தனது இடை பருமனாகிவிடக்கூடாது என்பதில் தீவிர கவனமாக உள்ளார்.
இதற்காக, உணவுக்கட்டுப்பாட்டை மட்டும் அவர் நம்பியிருக்கவில்லை. இடையை சிறிதாக வைத்திருக்க உதவும் கோர்செட் ஆடையையும் அவர் தினமும் 23 மணி நேரங்கள் அணிந்து கொண்டிருக்கிறார். கடந்த 6 வருடங்களாக இவ்வாறு இந்த ஆடையை தான் அணிவதாக அலெய்ரா கூறுகிறார். இவ்வாறு செய்வது ஆபத்தானது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், மருத்துவர்களின் அறிவுரையையும் புறக்கணித்துவிட்டு இந்த ஆடையை தொடர்ச்சியாக அணிந்திருக்கிறார் அலெய்ரா.
இவர் பிளாஸ்திக் அறுவை சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டுள்ளார். தான் வீதியில் செல்லும் போது பலரும் தன்னை வியப்புடன் பார்ப்பதாக அலெய்ரா கூறுகிறார். "வீதிகளில் மக்கள் என்னை வெறித்துப் பார்க்கின்றனர். எனது மெல்லிய இடைத் தோற்றம் உண்மையானது என்பதை மக்கள் சிலர் நம்ப மறுக்கின்றனர்" என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஆரம்பத்தில் இந்த ஆடையை அணிந்திருப்பது சிரமமாக இருந்ததாகவும் தான் மிகவும் வலியை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். "நான் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். அதேவேளை உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கிறேன். முட்டை வெள்ளைக்கரு, அன்னாசி மற்றும் பழங்கள், சிறிதளவு இறைச்சி ஆகியவற்றையே நான் உட்கொள்கிறேன்" என அலெய்ரா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment