சன்னி லியோன் என்றால் தெரியாமல் இருக்க மாட்டார்கள். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் வரை வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர்.
பூஜா பட்டின் ஜிஸம் 2 படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து விட்டார். சில படங்களில் குத்தாட்டம் போட்டும் வருகின்றார்.
இந்நிலையில் தற்போது ‘ஏக் பெஹலி லீலா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் சன்னி. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தில் தான் நடிப்பு மற்றும் நடனம் இரண்டிலும் மிகவும் தேறி விட்டதாக அவரே கூறுகின்றார்.
இவர் இதுவரை நடித்த படங்களில் நடிப்பு என்பது சுத்தமாக இல்லை. நன்றாக கவர்ச்சி காட்டுகின்றார் என்று தான் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடித்து வரும் ’ஏக் பெஹலி லீலா’ படத்திற்காக மார்வாடி மொழியை கற்றுக் கொண்டாராம் சன்னி.

No comments:
Post a Comment