Friday, 3 April 2015

10 மடங்கு பெரிய அளவான கோல்ட் பிஷ் ரக மீன்கள்…!


மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சாதாரண அளவைவிட 10 மடங்கு பெரிதான கோல்ட்பிஷ் ரக மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் கோல்ட் பிஷ், "கொய்" போன்ற மீன்களை அவற்றின் உரிமையாளர்கள் நீர்நிலைகளில் விட்டுச்சென்ற நிலையில் இம்மீன்கள் பிரமாண்டமாக வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ கீழே)
சாதாரணமாக 100 கிராம் எடையில் காணப்படும் கோல்ட் பிஷ் ரக மீன்கள் 2 கிலோகிராம் அளவுக்கு வளர்ந்த நிலையில் பிடிக்கப்பட்டுள்ளன. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் கொய் ரக மீன்கள் 8 கிலோகிராம் அளவுக்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டன. ஆனால், இம்மீன்களில் அபரிமித வளர்ச்சி குறித்து சூழலியல் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடையவில்லை.
மாறாக, இந்த மீன்கள் மேற்படி நீர்நிலைகளில் இயற்கையாக காணப்படும் மீன் இனங்களை அழிவடையச் செய்வதன் மூலம் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். "இத்தகைய மீன்களை நீர்நிலைகளில் விடுவதன் மூலம் ஏற்படக்கூடிய சுற்றாடல்பாதிப்புகளை மக்கள் பலர் அறியாமலுள்ளனர் என முர்டோக் பல்கலைக்கழகத்தின் மீன் மற்றும் மீன்பிடி ஆராய்ச்சித் திணைக்கத்தின் பணிப்பாளரான டாக்டர் டேவிட் மோர்கன் தெரிவித்துள்ளார்.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment