Tuesday, 7 April 2015

ஆப்பிளை தோலுடன் சாப்பிடலாமா?? கூடாதா??


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியது இல்லை என்பது ஒரு ஆங்கில பழமொழி. இது எந்த அளவிற்கு உண்மை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆப்பிள் சாப்பிடும் போது, தோலை நீக்கி விட்டு சாப்பிட வேண்டுமா?? இல்லை தோலுடன் சாப்பிட வேண்டுமா?? என்று தெரியுமா??
நிச்சயம் தோலுடன் தான் சாப்பிட வேண்டும். தோலுடன் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று தெரியுமா??
நீரிழிவு நோயாளிகள் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடுடன் இருக்கும். ஆப்பிளின் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஸ்டார்ச்சை உடைத்து சர்க்கரையாக மாற்றும் நொதிகளின் செயல்பாட்டை குறைத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.
ஆப்பிளின் தோலில் ட்ரிட்டர்பீனாய்டு என்னும் பொருள் நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. எனவே ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வந்தால், கல்லீரல், மார்பகம், குடல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்கலாம்.
ஆப்பிளின் தோலில் அர்சோலிக் என்னும் அமிலம் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் ஆப்பிளை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும்.
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், பல் சொத்தை ஏற்படுவது தடுக்கப்படும். எனவே தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், பல் சொத்தை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பற்கள் வெள்ளையாகவும், வாயில் எச்சிலின் உற்பத்தி அதிகரித்து வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
ஆப்பிளின் தோலில் கால்சியம் இருப்பதால், இதனை தோலுடன் சாப்பிட்டால், எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். முக்கியமாக மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளை சாப்பிடுவது சிறந்தது.
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கண் புரை ஏற்படும் அபாயம் குறையும். முக்கியமாக கண்களின் ஆரோக்கியம் மேம்படும். எனவே கண்களில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள்.
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதற்கு ஆப்பிளின் தோலில் உள்ள க்யூயர்சிடின் என்னும் பொருள் தான் காரணம். இது தான் நுரையீரலை சீராக செயல்பட வைக்கிறது.
ஆப்பிளின் தோலில் உள்ள க்யூயர்சிடின், மூளைச் செல்கள் பாதிப்படைவதையும், ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுத்து, ஆர்வத்தை அதிகரித்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment