Wednesday, 1 April 2015

பேராசிரியை முடியைப் பிடித்து கும்மும் பேராசிரியர் (வீடியோ)


தலைநகர் புது தில்லியில், பேராசிரியர் ஒருவர் அவருடன் பணியாற்றும் பெண்ணை முடியைப் பிடித்து இழுத்து அடித்து துன்புறுத்தும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், பெண் ஆசிரியருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த மற்றொரு ஆசிரியர் அவரை படம் பிடிக்க முயன்றுள்ளார். இதை பெண் ஆசிரியர் தடுக்க முற்படும் போது, அவரது முடியை இழுத்துப் பிடித்து அடித்துள்ளார்.
இதன் பின் அருகில் இருந்த மற்ற ஆசிரியர்கள் வந்து இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளன. புது தில்லியின் பிரபல தனியார் கல்லூரியில் கடந்த வருடம் நடந்த இச்சமபவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட ஆசிரியை கூறுகையில், ”குப்தா எனப்படும் அந்த நபர் அடிக்கடி என் அறைக்கு வந்து தொல்லை கொடுப்பார்.” ”என்னை தகாத வார்த்தைகளால் திட்டுவார், அசிங்கமாக பேசுவார், மிரட்டுவார்.” ”சம்பவம் நடந்த அன்றும் அவ்வாறு செய்கையில் என்னை புகைப்படம் எடுக்க முயன்றார்.” ”அதை தடுத்த என்னை தாக்கிவிட்டார்”, என்றார்.
இது குறித்து கல்வி நிறுவனம் சார்பிலோ அல்லது ஆசிரியை சார்பிலோ புகார்கள் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதே வேளை, இச்சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியை கல்லூரியிலிருந்து நடத்தை சரி இல்லை என்று காரணம் கூறி நீக்கப்பட்டார் என்பது தான் கொடுமை. வீடியோ கீழே

No comments:

Post a Comment