ஏப்ரல் 1 உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில், ஏப்ரல் ஃபூல்ஸ் தினத்துக்கு பதிலாக கெஜ்ரிவால் தினம் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியினுள் பூசல்கள் எழுந்து, முக்கிய தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப் பட்ட நிலையில் இந்த போஸ்டர்கள் வெளியேறியுள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போஸ்டரில் ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு ‘கெஜ்ரிவால் தினம்’ என வாழ்த்து தெரிவிப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
கெஜ்ரிவால் முகத்தை தொங்கப்போட்டு இருப்பது போலான கெஜ்ரிவாலின் பழைய படம் ஒன்றும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த 'பகத் சிங் கிராந்தி சேனா' அமைப்பினர் இந்த போஸ்டர்களை ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இது குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment