ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது செகண்ட் ரவுண்டை தொடங்கிய நயன்தாரா தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். தற்போது இருக்கும் நடிகைகளில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான்.
இவர் கைவசம் நண்பேண்டா, இது நம்ம ஆளு, தனி ஒருவன், நானும் ரவுடிதான், மாஸ், மாயா ஆறு படங்கள் உள்ளன. இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து ஒன்றன் பின் ஒன்றாக ரிலீசாக உள்ளன. நாளை வெளியாக போகும் நண்பேன்டா படத்திலிருந்து அவருடைய இந்த ஆண்டு படங்களின் வெளியீடு ஆரம்பமாக உள்ளது.
அடுத்து மே 1ஆம் தேதி மாஸ் படமும், மே 15ஆம் தேதி மாயா படம், ஜுன் 1ல் இது நம்ம ஆளு, ஜுன் 15ல் தனி ஒருவன், ஜுலை 15 நானும் ரௌடிதான் ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்திருக்கும் பாஸ்கர் த ராஸ்கல் படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்த படங்கள் ஆகும். இப்படங்கள் அனைத்தும் ஹிட் லிஸ்டில் அமைந்தால், இவ்வருடத்தின் அசைக்க முடியாத நாயகியாக நயன்தாரா இருப்பார் என கூறப்படுகிறது. அதைதவிர விக்ரமுடன் ஒரு படமும், ஆர்யாவுடன் ஒரு படமும் நடிக்க இருக்கிறார் நயன்தாரா.
No comments:
Post a Comment