இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், புகழ்பெற்ற பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரான டங்கன் ஃப்ளெட்சரின் பதவிக்காலம் இந்த உலகக் கோப்பை தொடருடன் முடிவடைய உள்ள நிலையில் சச்சினை இந்திய அணியின் பயிற்சியாளராக மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்க உள்ளதாக பிசிசிஐ-ன் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த பிறகு சச்சின் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று பத்தியரிக்கையாளர்கள் சந்திப்பில் பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், டங்கன் ஃப்ளெட்சருக்கு இருந்த அதே கட்டுப்பாடுகளும், சலுகைகளும் மட்டுமே சச்சினுக்கும் வழங்கப்படும் என்று பிசிசிஐ நிர்வாகி ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
மேலும், சச்சினின் நியமனம் குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில், ’சச்சினின் பயிற்றுவிக்கும் முறை நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருக்கும். அவர் அணிக்காக விளையாடும் போது, எப்படி விளையாடினாரோ அதேபோல தான் பயிற்சியின் போதும் பின்பற்றுவார் என நம்புகிறேன்’ என்று கூறினார்.
சச்சின் இந்த பதவியை பெறுவதன் பின்னணியில் தோனி மற்றும் கோலியின் சிபாரிசு இருப்பதாகவும், பிசிசிஐ சச்சினை நியமிக்கும் முன்னதாக ஸ்ரீனிவாசன் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சச்சின் இந்த வருட உலகக் கோப்பை தொடருக்கு விளம்பரத் தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment