Wednesday, 1 April 2015

மாட்டிக்கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி..? கூகுல் பன்னி மாட்டிய தம்பதி..!


மாட்டிக் கொள்ளாமல் வங்கியில் கொள்ளையடிப்பது தொடர்பாக கூகுள் இணையத்தளத்தில் தேடுதல் நடத்திய தம்பதியினர் வங்கிக் கொள்ளை ஒன்றின் பின்னர் போலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கொடி டேவிஸ் (33), அமண்டா டேவிஸ் (31) ஆகிய இருவரும் சூதாட்டத்தில் தமது பணம் முழுவதையும் இழந்த பின்னர் கொலராடோ மாநிலத்தின், போர்ட் கொலின்ஸ் நகரிலுள்ள கிறேட் வெஸ்ட்ரன் வங்கியில் கொள்ளையடிக்கத் தீர்மானித்தனர். கொள்ளையடித்தவர்கள் யார் என்பதை எவரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக பல முன்னேற்பாடுகளை இவர்கள் மேற்கொண்டனர்.
இதற்காக, கடந்த காலங்களில் வங்கியில் கொள்ளையடித்தவர்கள் எவ்வாறு அகப்பட்டனர் என்பதை அறிவதற்கு கூகுள் இணையத்தளத்திலும் அமண்டா பல தேடுதல் நடத்தினார். மேற்படி வங்கியில் இவர்கள், கொள்ளையடிக்கச் சென்றபோது, காசாளர் ஒருவரிடம் அமண்டா குறிப்பொன்றை நீட்டினார். பணத்தை எடுத்து பையொன்றில் வைக்குமாறு அதில் எழுதப்பட்டிருந்தது.
ஆனால் 597 டாலர்கள் மட்டுமே இத்தம்பதிகளால் எடுத்துக்கொள்ள முடிந்தது. அத்துடன் போலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். கொடி டேவிஸும் அமண்டாவும் தப்பியோட முயற்சித்தபோதிலும் அவர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், அமண்டா நடத்திய கூகுள் தேடல்கள் விபரமும் கண்டறியப்பட்டது.

No comments:

Post a Comment