Wednesday, 1 April 2015

வைர வியாபாரிக்கு நிர்வாண போஸ்.. சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு


பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ஏக் பஹேலி லீலா. இப்படத்தைதான் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் சன்னி லியோன். இந்நிலையில் அவர் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர்.
ஏன் என்ன காரணம் என்றால், கடந்த ஆண்டு புனே - மும்பை நெடுஞ்சாலை விடுதியொன்றில் வைர வியாபாரிகள் நடத்திய விருந்தில் பங்கேற்ற சன்னி லியோன் மேலாடையின்றி போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், அந்த புகைப்படங்கள், மக்காவ் தீவில் எடுக்கப்பட்டதாகவும், வைர வியாபாரிகள் தங்களது வர்த்தக விளம்பரத்திற்காக, அந்த புகைப்படத்தை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. தற்போது இதுதொடர்பாக, சன்னி லியோன் மீது சூரத் போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
சன்னி லியோன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி முதலில் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்தது. ஆனால் பிறகு வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார் தயாரிப்பாளர். இதனால் போலீசார் சன்னி லியோன் மீது சந்தேகப்பட்டு வழக்குப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment