கடந்த 14 வருடங்களாக அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து உலகம் முழுவதும் வசூலை குவித்து கொண்டிருக்கும் படம் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்'. இப்படத்தின் 7-வது பாகம் கடந்த வாரம் இந்தியாவில் வெளியானது.
இந்தப் படத்தை ஜேம்ஸ் வான் என்பவர் இயக்க, வின் டீசல், பால் வாக்கர், டுவெயின் ஜான்சன் ( த ராக்), மிச்செல் ரோட்ரிக்வெஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் இந்தியாவில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த வாரம் கொம்பன், நண்பேண்டா, சகாப்தம் போன்ற தமிழ் படங்கள் களத்தில் குதித்தாலும், ஹாலிவுட் படமான ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7’ படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் ரிலிஸான 2 நாட்களில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ. 33 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இது விஜய், அஜித் படங்களை விட வசூல் அதிகமாம். ஆனால் விஜய், அஜித் படங்களை விட குறைந்த தியேட்டர்களிலேயே இப்படம் ரிலீஸாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment