ஜப்பானின் தலைநகரான டோக்கியோவைச் சேர்ந்த மீக்கோ நகோகா 1,500 மீட்டர் தூரத்தை ஃப்ரீ ஸ்டைலில்(பின்பக்கமாக) 15 நிமிடம் 54 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். மீக்கோவுக்கு வயது 100 என்பது தான் இங்கே ஆச்சரியமான விஷயம்.
மேலும், இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மீக்கோ ஒன்று சிறுவயதில் இருந்து நீச்சல் கற்றுக் கொண்டவரோ அல்லது, நீச்சலில் ஆர்வம் காட்டியவரோ இல்லை. இவர் தனது 82வது வயதில் முழங்கால் வலிக்காக சிறிது நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
அப்போது அவருக்கு நீச்சலடிப்பது பிடித்துவிட, 2002ஆம் ஆண்டு முதன் முதலில் நியூசிலாந்தில் நடைபெற்ற 50மீ நீச்சல் போடியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 2004-ல் 50,100,200 மீட்டர்கள் பின்புற நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.
இவரின் திறமையைப் பார்த்து வியந்த ஜப்பான் அரசு, இவரின் 90வது வயதில் இவரை தேசிய நீச்சல் வீராங்கனையாக அறிவித்தது.
தற்போது தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டு டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் 1500 மீட்டர்கள் தூரத்திற்கு பின்புறமாக நீச்சல் அடித்து சாதனை செய்துள்ளார். அதுவும், 00:15:54 நிமிடங்களில்.!!

No comments:
Post a Comment