ஆண்டு தோறும், சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விஜய்டிவி சார்பில் விஜய் அவார்ட்ஸ் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வந்த நிகழ்ச்சி தற்போது, 9ஆம் ஆண்டு விழாவை இந்த ஏப்ரல் 25ஆம் தேதி நடத்த உள்ளது.
இப்போட்டிக்கு நடுவர்களாக ஆர். பால்கி, கே. பாக்யராஜ், யூகிசேது, கே.வி.ஆனந்த் மற்றும் நடிகை நதியா ஆகியோர் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற வருடம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களிலிருந்து சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்குவார்கள்.
இந்த விருதில் ரசிகர்களின் பங்கும் உள்ளது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை, படம், இயக்குனர் மற்றும் பாடல் ஆகிய ஐந்து பிரிவில் ஓட்டளிக்கலாம்.
இந்த முறை ஃபேவரட் பிரிவுகளில் தேர்வானவர்கள்:
ஹீரோ:
ரஜினி – லிங்கா
விஜய் – ஜில்லா
அஜித் – வீரம்
சூர்யா – அஞ்சான்
தனுஷ் – வேலையில்லா பட்டதாரி
ஹீரோயின்:
ஹன்சிகா – மான் கராத்தே
சமந்தா - கத்தி
நயன்தாரா – இது கதிர்வேலன் காதல்
ஸ்ருதிஹாசன் – பூஜை
ஸ்ரீதிவ்யா – ஜீவா
இயக்குனர்:
கே.எஸ் ரவிக்குமார் – லிங்கா
ஏ.ஆர். முருகதாஸ் – கத்தி
சிவா – வீரம்
ஹரி – பூஜை
சுந்தர்.சி – அரண்மனை
படம்:
கத்தி
வீரம்
வேலையில்லா பட்டதாரி
அரண்மனை
கோலி சோடா
பாடல்:
மோனா கேசோலினா – லிங்கா
செல்ஃபி புள்ள – கத்தி
நான் நீ - மெட்ராஸ்
அம்மா அம்மா – வேலையில்லா பட்டதாரி
கூட மேல - ரம்மி
இதற்கு இரண்டு முறைகளையும் விஜய் டிவியினர் கொடுத்துள்ளனர்.
ஒன்று இந்த லிங்க்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக VOTE செய்யலாம்.
அல்லது, கீழே உள்ள நம்பர்களுக்கு கால் செய்தால் உங்கள் ஓட்டு பதிவாகிவிடும். இந்த கால் ஒன்று அல்லது இரண்டு ரிங்குகள் அடித்து தானகவே கட் ஆகி விடும். அதுவரை காத்திருக்க வேண்டும். இல்லையெனில் உங்களது VOTE ஏற்றுக் கொள்ளப்படாது.

No comments:
Post a Comment