கத்தி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வருகின்றார் விஜய்.
முழுநீள பேன்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உட்பட பலர் நடிக்கின்றனர். கிட்டத்தட்ட இந்த படத்திலேயே ஒரு நட்சத்திர பட்டாளம் இருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தை முடித்த கையுடன், ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் ஹிரோயின்களாக நடிக்க உள்ளனர்.
மேலும், இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிக்க உள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குனர் பாரதிராஜாவை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நட்சத்திரங்கள் அனைவரும் விஜய் தற்போது நடித்து வரும் ’புலி’ படத்தை முடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment