இத்தாலியைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் 25 வருடங்களுக்கு முன்னர் காலாவதியான சாக்லேட்டை பயன்படுத்தியதன் மூலம், தனது குடும்பத்தின் 3 தலை முறையைச் சேர்ந்த உறுப்பினர்களை பாதிப்பு உட்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
77 வயதான ரொசெட்டா எனும் இப்பெண், தனது கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு சாக்லேட் கலந்த பால் வழங்கினார். இப்பாலை அருந்திய 7 பேர் சிறிது நேரத்தில் சுகயீனத்துக்குள்ளானதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்பின்னர் விசாரணை நடத்தியபோது, 25 வருடங்களுக்கு முன்னர் காலாவதியான சாக்லேட்டை பாலில் கலந்துள்ளமை தெரியவந்தது.
1980களில் இந்த சாக்லேட் பாக்கெட் வாங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அது 1990 ஆம் ஆண்டுடன் காலவாதியானபோதிலும் அப்புறப்படுத்தப்படாமல் வீட்டிலுள்ள கபர்ட்டில் இருந்துள்ளதாகவும் அதன் காலாவதித் தேதியை கவனிப்பதற்கு மேற்படி பெண் மறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது ரொசெட்டாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆராய்கின்றனர்.
No comments:
Post a Comment