ஆடிய பல்லை பிடுங்க டாக்டரிடம் செல்லாமல் காரில் கட்டி இழுத்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ராபர்ட் என்பவர் தான் தான் தனது மகனின் ஆடும் பல்லைப் பிடுங்க இப்படி செய்துள்ளார்.
இவருடைய மகனின் பல் ஒன்று ஆடிக் கொண்டிருந்துள்ளது. இதனை பிடுங்க மருத்துவரின் உதவியை நாட விரும்பாத தந்தையும் மகனும் வேறு ஒரு வழியை யோசித்துள்ளனர்.
அதன்படி ஆடிக்கொண்டிருந்த பல்லை நூலால் கட்டி, அதை காரின் பின்பகுதியுடன் இணைத்த ராபர்ட் காரை வேகமாக செலுத்தியுள்ளார்.
அப்போது அவரது மகனின் பல் பிடிங்கிக்கொண்டு வந்து விட்டது. இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து இணையத்தில் ராபர்ட் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய ஒரே பயம் என்னவென்றால், என் மகன் சாலையில் விழுந்து அவனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுவிடுமோ? என்பது தான் என மிக சாதரணமாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment