இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா தனது சிறிய வயது தோழி பிரியங்கா செளத்ரியை நேற்று திருமணம் செய்துக்கொண்டார். பிரியங்கா பி டெக்., முடித்து பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது பிரியங்கா நெதர்லாந்தில் பணியாற்றி வருகிறார். ரெய்னாவின் தாயாரின் சிநேகிதியின் மகள் பிரியங்காவும், ரெய்னாவும் சிறிய வயது முதலே பழகி வந்தனர். இந்நிலையில் நேற்று டில்லியில் ஓட்டல் லீலா பேலசில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இத்திருமண விழாவில் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவுடன் இணைந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவெய்ன் பிராவோ மற்றும் இந்திய அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் பங்கேற்றனர்.
மேலும் இந்திய அணியின் விராத் கோலி தனது காதலி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்டார். இத்திருமண விழாவிற்கு பல அரசியல் பிரமுகர்கள் வருகை தந்தனர். திருமணத்தை முன்னிட்டு ரெய்னாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment