Friday, 3 April 2015

542 ரூபா கொடுத்தால் ஜப்பானிய பிரதமருடன் செல்பி…!


ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் லிபரல் ஜனநாயகக் கட்சி தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்காக பிரதமர் அபேவுடன் செல்பீ படம்பிடித்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளது.
இதற்காக டோக்கியோவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் பூரி குரா எனும் போட்டோ பூத் இயந்திரம் ஒன்றையும் அக்கட்சி நிர்வாகிகள் பொருத்தியுள்ளனர். தமது புகைப்படங்களுடன் ஏனைய நபர்கள், அல்லது பின்னணி காட்சிகளை இணைத்துச் புகைப்படங்களை ஸ்டிக்கர் தாள்களில் அச்சிட்டுக்கொடுக்கும் பூரி குரா போட்டோ இணைப்புகள் ஜப்பானிய பெண்கள் மத்தியில் பிரசித்தமானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இனிமேல் ஜப்பானிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்துக்குச் செல்பவர்கள் 500 யென், சுமார் (542 ரூபா) கொடுத்தால் ஜப்பானிய பிரதமர் அபேயுடன் தோன்றும் பூரிகுரா ஸ்டிக்கர் சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அரசியலானது தமக்கு மிக நெருக்கமானதாகும் என மக்களை உணரச்செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என மேற்படி கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment