Friday, 3 April 2015

இன்று நள்ளிரவு ‘ஓ காதல் கண்மணி’!!!


கடல் படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்கும் படம் ‘ஓ காதல் கண்மணி’ முதலில் ‘ஓகே கண்மணி’ என்று பெயரிடப்பட்டு பின்பு மாற்றப்பட்டது.
இப்படத்திற்கு வழக்கம் போல ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கின்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே படத்தின் டீஸர் இணையதளங்களில் பெரும்பாலான ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு எப்போதும் இல்லாத அளவிற்கு ப்ரோமோஷன் செய்ய மணிரத்தினம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பொதுவாக இவரது படங்களில் விளம்பரத்திற்கு என்று மெனக்கெட மாட்டார். ஆனால், இப்படத்திற்கு தனது முடிவை மாற்றுகின்றார் போலும். இதன் முதல் கட்டமாக இப்படத்தின் இசையை இன்று நள்ளிரவு வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் இசையை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment