பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். நம்மூர் ஹீரோவான தனுஷுக்கு ஜோடியாக ‘ராஞ்சனா’படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அவர் தற்போது ’பிரேம் ரத்தன் தான் பாயோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விட்டது. ஒரு வழியாக குணமடைந்த சோனம் கபூரை திரும்பிப் பார்க்க ஆளே இல்லை. இந்நிலையில் தான் பாரிசில் நடந்த மாடலிங் அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்க சோனமிற்கு அழைப்பு வந்தது. அதில் கலந்துகொள்பவர்கள் கவர்ச்சியாக உடை அணிந்து வரவேண்டும்.
சோனம் கபூருக்கு கவர்ச்சி என்றால் பிடிக்காது அதனால் அவர் அந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளமாட்டார் என்று எண்ணிக்கொண்டிருந்த பாலிவுட்காரர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் அளவுக்குப் படுகவர்ச்சியாக ஒய்யார நடை நடக்க சம்மதித்திருக்கிறாராம் சோனாம்.
காரணம் சோனம் கபூருக்கு பிகினி, லிப் கிஸ், கவர்ச்சி என்பதெல்லாம் தற்போது அத்துப்படியாகிவிட்டதாம். இன்னும் சொல்லப்போனால் தற்போதைய இணையத்தள பரபரப்பு சோனம் கபூர்தான் என்று கூறும் அளவுக்குப் படுகவர்ச்சியாக அவரது படங்கள் உலா வரத் தொடங்கி இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் அவரே இணையத்தில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுக் கண்களைக் கூசச் செய்திருக்கிறார். சமீபத்தில் கூட தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார் சோனம்.

No comments:
Post a Comment