Tuesday, 7 April 2015

இன்றைய தினம்....!! (ஏப்ரல் 8)


ஏப்ரல் 8
1857
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார்!!
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மங்கள் பாண்டே, இந்திய கிழக்கிந்திய கம்பெணியின் இராணுவப் படையில் சிப்பாயாகப் பணி புரிந்தவர். 22வது வயதில் இருந்தே கிழக்கிந்தியக் கம்பெணியின் இராணுவத்தில் இருந்த இவர் இராணுவத்தின் 34வது பிரிவு என்ற சிறப்புப் படையில் ஒரு அங்கமாவார்.
கல்கத்தாவின் பராக்பூர் நகரில் மார்ச் 29, 1857ம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பில், கண்ணில் படும் ஆங்கிலேயர்கள் அனைவரையும், சுட்டுத் தள்ளுவேன் என்று சூளுரைத்து கையில் துப்பாக்கி ஏந்திச் சென்றார்.
அதே வேளை இந்திய சிப்பாய்கள் பலர் ஆங்கிலேய ஆட்சிக் கெதிராக கிளர்ந்தெழுந்தனர். இந்த விஷயம் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் லெப்டினண்ட் போ(Baugh) என்பவனது காதுகளை எட்ட, சிப்பாய்களை அடக்க அவ்விடத்திற்கு குதிரையில் விரைந்தான்.
துப்பாக்கியுடன் திரிந்த மங்கள் பாண்டேவைக் கண்டதும், போ சுட ஆரம்பித்தான். இவர்கள் இருவருக்கு இடையேயான மோதலில், பாண்டே சிறை பிடிக்கப்பட்டார். லெப்டினெண்ட், போ வாள் வெட்டுக்குள்ளானான்.
இதனை அடுத்து மங்கள் பாண்டே விசாரணை செய்யப்பட்டு இதே தினத்தன்று தூக்கிலடப்பட்டான். தூக்கிலிடப்பட்டபோது மங்கள் பாண்டேவின் 29 வயது தான். இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற்குக் காரணமான மங்கள் பாண்டே இறந்த தினம் இன்று.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1929 - டில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.
1950 - இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
1957 - எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
சர்வதேச ரோமன் தினம்
ஹனா மத்சூரி (அ) புத்தர் பிறந்த நாள் (அ) மலர் விழா (ஜப்பான்)

No comments:

Post a Comment