இன்று அதிகாலை திருப்பதி வனப்பகுதியில், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சுமார் 200 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் 12 பேர் தமிழர்கள் என்று தெரியவந்ததை அடுத்து இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர், ஆந்திரா உள்துறை அமைச்சர் சின்ன ராஜகப்பாவிடம் கூறுகையில், செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாலேயே சுட்டுப் படுகொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரா அமைச்சர் சின்ன ராஜப்பா, தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனவே இச்சம்பவத்தில் எந்த ஒரு மனித உரிமை மீறலுமே இல்லை. என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment