ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு சம்பந்தமாக சன் குழுமத்தின் இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரது 742 கோடி சொத்துக்களை சி.பி.ஐ. முடக்கியுள்ளது.
முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சாரக பதவி வகித்திருந்த காலத்தில், ஏர்செல் நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருணன் என்பாரது மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு கட்டாயப்படுத்தி விற்கச் செய்துள்ளார்.
இதற்கு பதிலாக, மேக்ஸிஸ் நிறுவனத்திடமிருந்து கலாநிதி மாறனின் சன் டைரக்ட் டிவி நிறுவனத்திற்கு பங்குகள் என்ற பெயரில் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக கடந்த 2014வது வருடம், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் மேக்ஸிஸ் நிறுவன உரிமையாளர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இவ்வழக்கு டெல்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி வழக்கு தொடர்பாக, மாறன் சகோதரர்கள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். ஆனால், மேக்ஸிஸ் நிறுவனர் அனந்த கிருஷ்ணன் ஆஜராகவில்லை.
வழக்கு தொடர்ந்து 3ம் தேதியும் நடந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கையாக சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையில், அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ், கலாநிதி மாறனின் சன் குழும பங்குகள் உட்பட, மாறன் சகோதரர்களின் ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிரடியாக முடக்கியுள்ளது.
No comments:
Post a Comment