Tuesday, 7 April 2015

4K ரெக்கார்டிங்குடன் வரும் நிக்கான் J5!!!


பிரபல டிஜிட்டல் கேமரா தயாரிப்பு நிறுவனமான நிக்கான் தனது கடந்த வருட மாடலை 4K ரெக்கார்டிங் வசதியுடன் புதுப்பித்து நிக்கான் J5 என்ற பெயரில் வெளியிட உள்ளது.
மேலும் இதில் CMOS சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிக்கான் J5 ஆனது 20.8 மெகா பிக்சல் கொண்ட கேமராவாகும்.
இதில் 3இன்ச் கொண்ட திருப்பக் கூடிய ஸ்கிரீன் உள்ளது. இதன் மூலம், செல்ஃபி புகைப்படங்களை எடுக்க முடியும்.
இதில் வீடியோவானது, 15fps-ல் 4K தரத்திலும், 60fps-ல் 1080p தரத்திலும், ஹைடெஃபனிஷன் வீடியோவை 120fps வேகத்திலும் பதிவு செய்யலாம்.
புகைப்படங்களானது, 20fps மற்றும் 60fps வேகத்தில் தொடர்ச்சியான ஃபோக்கஸுடன் எடுக்க முடியும். மேலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை WiFi மற்றும் NFC மூலம் ஷேர் செய்ய முடியும்.
நிக்கானின் இந்த புதிய மாடலானது சில்வர் – வெள்ளை, சில்வர் – கருப்பு மற்றும் கருப்பு நிறங்களில் வெளியாகும் இது, ஏப்ரல் 30-ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், இதன் விலையானது, ரூ. 35,000-ல் இருந்து ஆரம்பமாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ கீழே…

No comments:

Post a Comment