உடலில் வியர்வை அதிகமாகும்போது அதிக நறுமணத்தை ஏற்படுத்தும் வாசனைத் திரவியமொன்றை தாம் உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியர்வை அதிகரிப்புக்கு ஏற்ப வாசனை அதிகரிக்கும் உலகின் முதல் வாசனைத் திரவியம் இதுவாகும்.
இது உடல் துர்நாற்றத்தையும் குறைக்கும் என வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரிலுள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாசனைத் திரவியம் நீருடன் கலக்கும்போது அதிக நறுமணத்தை வெளியிடுகிறது.
இக்கண்டுபிடிப்பானது புதிய முறையிலான வாசனைத் திரவிய தயாரிப்புகளுக்கு வழிவகுப்பதன் மூலம், பெரிய வர்த்தக சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளது என இந்த ஆய்வுத்திட்டத்தின் தலைவரான கலாநிதி நிமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இது அழகுசாதன கிறீம் தயாரிப்பு போன்றவற்றுடன் வேறு விஞ்ஞானத்துறைகளிலும் பயன்படுத்தப்படலாம்" என அவர் கூறியுள்ளார். இத்திட்டம் தொடர்பாக வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனமொன்றுடன் ஏற்கெனவே தாம் இணைந்து செயற்படுவதாக குயின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment