மார்க்கெட் இல்லை என்றாலும் சமீபக்காலமாக நடிகை சார்மி ஏதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்.
சமீபத்தில் கூட தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினத்தன்று தனது இணையதள பக்கத்தில் நீச்சல் உடையுடன் ஜூஸ் கிளாஸ் ஒன்றுக்கு முத்தமிட்டபடி தோன்றும் போட்டோவை வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
யுகாதி என்பது பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் விழா அதற்கு கொஞ்சமும் பொருந்தாத வகையில் ஜூஸ் கிளாஸுக்கு முத்தம் கொடுப்பதுபோல் அதுவும் நீச்சல் உடையில் நின்றபடி வாழ்த்து கூறுவதா என்று பலரும் சார்மி மீது அப்போது எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
இந்நிலையில் தற்போது டுவிட்டரில் தனது புகைப்படத்திற்கு கீழே இன்று எனக்கு திருமணம் என்று தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் சார்மி. இந்த செய்தி காட்டு தீ போல சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. சார்மியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சமீபகாலமாகவே சில படங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்த இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகின்றது. இந்நிலையில் சார்மி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதிலக்ஷ்மி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தான் இந்த கெட்அப் பா அல்லது அடுத்த புதிய படத்தின் ஸ்டில்லா? சார்மி தெளிவு படுத்தும் வரை பரபரப்பு ஓயாது என்று தெரிகிறது.

No comments:
Post a Comment