Wednesday, 1 April 2015

ஏமனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 4000 பேரில் 350 பேர் மீட்பு


ஏமனில் அதிபர் அபட்ராபோ மன்சூர் ஹதி ஆட்சிக்கு எதிராக ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்கள் கொண்டு போராடிவருகின்றனர். இதனால் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.
எமனின் முக்கிய அகரங்கள் சிலவற்றையும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து முன்னெச்சரிக்கையாக அதிபர் மன்சூர் ஹதி சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், சவுதி வான் படைகள், ஏமனில் கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அங்கிருக்கும் மக்களின் வாழ்வுநிலை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
ஏமனில் சுமார் 4000 இந்தியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில், அங்கிருந்த மக்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கையில், தங்களை மீட்க இது வரை சரியான நடவடிகைகள் எடுக்கப்பட வில்லை என்று தெரிவித்திருந்தனர்.
அதே வேளை, 4000 பேரில் இந்தியாவிற்கு 44 பேர் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, ஏமனின் தலைநகரான சனாவில் இருந்து, இந்தியர்களை விமானத்தில் அருகில் உள்ள குட்டி நாடான ஜிபோட்டிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களை கப்பலில் அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து எம்.வி.கவரட்டி, எம்.வி.கோரல்ஸ் என்ற 2 பயணிகள் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய கடற்படையின் சுமித்ரா போர்க்கப்பல் உடன் சென்றுள்ளது. இன்று ஏமனில் இருந்து சுமார் 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்று இரவும் மீட்புப் பணி தொடரும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விமானங்கள் மஸ்கட் கொடு செல்லப்பட்டு அங்கிருந்து ஏமன் அரசின் அனுமதி கிடைத்த உடன் தலைநகர் சனாவிற்குச் சென்று அங்கிருக்கும் இந்தியர்களை ஏமன் அருகில் இருக்கும் ஜிபோட்டி என்ற நாட்டிற்கு அழைத்து வருகின்றன. ஜிபோடியில் இருந்து மக்கள் கப்பல் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

No comments:

Post a Comment