Wednesday, 1 April 2015

கொம்பன் படம் எப்படி..? முன்னோட்டம்..!


முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ் கிரண் நடிப்பில் பல தடைகளை தாண்டி வெளிவந்திருக்கும் படம் தான் ‘கொம்பன்’. ’பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கிராமத்துப் பின்னணியில் நடித்திருக்கிறார் கார்த்தி.
ஆனால் ‘பருத்தி வீரன்’ அளவிற்கு ஆழமாகவும், அழுத்தமாகவும் இல்லை என்றாலும், ஒரு ஜனரஞ்சகமான மாமனார்-மருமகன் பாசத்தை வெளிபடுத்தி இருக்கிறதாம் இந்த ’கொம்பன்’.
சரி கொம்பன் கதை எப்படி..? ஊருக்குள் எங்கே தப்பு நடந்தாலும் அதைத்தட்டிக் கேட்கும் முரட்டு இளைஞனாக வலம் வருகிறாராம் கார்த்தி. அவருக்கும், எந்த வம்புச்சண்டைக்கும் போகாத ராஜ்கிரண் மகள் லட்சுமிமேனனுக்கும் திருமணம் நடக்கிறது. தனக்கு பெண் கொடுக்கும் முன்பு ஊருக்குள் தன்னைப்பற்றி முத்தையா எல்லோரிடம் விசாரித்தது கொம்பனுக்குத் தெரியவர, தன் மாமனாரை திருமணத்திற்குப் பின்பு மதிக்காமல் நடந்து கொள்கிறார் கார்த்தி.
ஒரு கட்டத்தில் கார்த்திக்கும் ராஜ்கிரணுக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் அளவிற்கு பிரச்சினை செல்கிறது. இது ஒருபுறமிருக்க கொம்பனுக்கும் பக்கத்து ஊர் பெரிய மனுசனான சூப்பர் சுப்பராயன் இடையே பதவித்தகராறு ஒன்றில் மோதல் ஏற்படுகிறது. தனக்கு இடைஞ்சலாக இருக்கும் கொம்பன் கார்த்தியை ஆள்வைத்து கொலை செய்யத்திட்டமிடுகிறான் சூப்பர் சுப்பராயன்.
கார்த்தியின் உயிரை காப்பாற்ற ராஜ்கிரண் சூப்பர் சுப்பராயனை நடுரோட்டில் அடிக்க, உன்னையும் உன் மருமகனையும் கொன்றே தீருவேன் என்று சம்பதம் எடுக்கிறார் சுப்பராயன். இதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியை கொம்பன் கார்த்தி முறியடித்தாரா..? தன் மாமனார் ராஜ்கிரணை கிளைமேக்ஸில் காப்பாற்றினாரா..? என்பதுதான் மீதி கதையாம்.
படத்தில் கார்த்தி கொம்பனாகவே வாழ்ந்திருக்கிறாராம். அதேபோல் லட்சுமிமேனனும், ராஜ்கிரணும் நிஜமான கிராமத்துவாசிகளாக வாழ்ந்திருக்கிறார்களாம். கிராமத்து படங்கள் என்றாலே... வெட்டுக்குத்து ஆக்‌ஷன் படமாக இருக்கும், இல்லையென்றால் பாசத்தைப் பிழியும் சென்டிமென்ட் படமாக இருக்கும்.
ஆனால், ‘கொம்பனி’ல் இந்த இரண்டு விஷயங்களையும் சரிவிகிதத்தில் கையாண்டு கைதட்டல் வாங்கியிருக்கிறாராம் முத்தையா. மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் ஒரு சிறப்பான பொழுபோக்குப்படத்தைக் கொடுத்திருக்கிறாராம் இயக்குநர் முத்தையா.

No comments:

Post a Comment