கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் ''ஓ காதல் கண்மணி''. இந்தப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளர்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் யு-டியூபில் வெளியானது. 1 நிமிடம், 22 வினாடிகள் ஓடும் இந்த டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், மீண்டும் ஒரு அலைபாயுதே படத்தைப் பார்ப்பதுபோல் இளமைத்துள்ளலுடன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். டிரைலர் வெளியாகி 3 நாட்களுக்குள் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதை பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசை, வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராவணன், கடல் படங்களின் தோல்வியை தொடர்ந்து, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், மிகக்குறுகிய காலத்தில், இந்த படத்தை, மணிரத்னம் எடுத்து முடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள மெண்டல் மனதில்.... பாடல், ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment