Wednesday, 1 April 2015

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் என்ன ஆகும்??


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லவேண்டியது இல்லை என்பது பழமொழி.
ஆனால், இது அந்தளவிற்கு உண்மையில்லை என்று கூறுகின்றது, மருத்துவ ஆய்வுகள்.
’one apple a day keep the doctor away’ என்பது அனைவரும் அறிந்த பழமொழி தான். ஆனால் இது எந்தளவு உண்மை என்று அறிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மற்றும் எப்போதாவது ஆப்பிள் சாப்பிடுபவர்கள் என்று பிரிக்கப்பட்டு 2007-10 வரை அவர்களின் மனநிலை, உடல்நலம் போன்றவை குறித்து தொடர்ந்து கவனிக்கப்பட்டு வரப்பட்டது. இதில் இரு தரப்பினருமே ஒரே போலதான் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு சுமார் 8,399 பேர்களிடம் நடத்தப்பட்டது. இதில் ஆப்பிளை தினமும் சாப்பிடுபவர்களும், எப்போதாவது சாப்பிடுபவர்களுக்கு இடையே உடல் நிலையிலோ அல்லது மன நிலையிலோ எந்த ஒரு மாற்றமும் பெரிதாக இல்லை என்று கூறியுள்ளனர்.
எனினும், ’தினமும் ஆப்பிளை உண்பவர்கள் மற்றவர்களை விட குறைவான மருந்துகளையே எடுத்துக் கொள்கின்றனர்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment