Thursday, 2 April 2015

இன்றைய தினம்....!! (ஏப்ரல் 3)


ஏப்ரல் 3
மராத்திய மாமன்னர் சிவாஜி நினைவு தினம்
இந்திய வரலாற்றில் மிகவும் முக்கிய பங்கு வகித்த மராத்திய மன்னர் சிவாஜி மறைந்த தினம் இன்று. முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் தற்போதைய மகாராஷ்டிராவில் வலிமையான மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் சிவாஜி.
அது மட்டுமல்லாது, ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்படுவதற்கு முன், ஆங்கில்யேர், முகலயர், மற்றும் போர்த்துக் கீசியருக்கு ஈடு கொடுத்து, ஹிந்தவி சுயராஜ்ஜியம் (இந்திய சுயாட்சி) என்ற கொள்கையுடன் ஆட்சி செய்தவர்.
சிவாஜியின் கொள்கைகள், இஸ்லாமிற்கு எதிராகவோ அல்லது இந்துத்துவத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது. சிவாஜியின் இராணுவமும், கடற்படையும் இவரது பலமாகக் கருதப்படுகின்றன.
இவரது எதிரி ஆட்சியாளர்களுடன் ஒப்பிடுகையில், சிவாஜியிடம் சிறிய படையே இருந்தது. பெண்களை யுத்த காரணத்திற்காக பயன்படுத்துதல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன.
இவரது நகரங்கள் கடற்கரையை ஒட்டியே அமைந்தன. இந்தியாவில் முதல் கடற்படை தளத்தை அமைத்தவரும் இவரே. இதனால், மேற்கு நாடுகளில் இருந்து வந்த போர்த்துக்கீசிய மற்றும் ஆங்கிலேய கப்பல்கள் இவர் வசம் அடிக்கடி சிக்கின. இதனால் இவர் இந்திய கடற்படையின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1917 - வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்.
1933 - நாசி ஜெர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1973 - உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
உலக பத்திரிகை சுதந்திர நாள்

No comments:

Post a Comment