Thursday, 2 April 2015

ஓவரா சரக்கு அடிக்காதீங்க..? பிரேம்ஜி, வெங்கட் பிரபுக்கு சூர்யா அட்வைஸ்..!


வெங்கட் பிரபு படம் என்றால் கண்டிப்பாக அதில் அவருடைய தம்பி பிரேம்ஜி அமரன் இருப்பார் என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இளையராஜாவின் தம்பி மகன்களான இவர்கள் இருவரும் அண்ணன் தம்பியைப்போல் பழகாமல் நண்பர்களைப்போல் பழகுவார்கள்.
பொதுவாக அண்ணன், தம்பி என்றால் ஒருவரை பார்த்தாலே ஒருவர் விலகி சென்றுவிடுவோம். ஆனால் இவர்கள் ஒன்றாகவே பார்ட்டிகளுக்கு செல்வது, கூத்தடிப்பது என்று ஜாலியாக இருப்பார்கள். தினமும் ஏதாவது ஒரு பார்ட்டியில் கண்டிப்பாக இவர்கள் இருப்பார்கள்.
தற்போது இவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் நடிகர் சூர்யா. வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யாவுக்கு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது.
மாஸ் படப்பிடிப்பின்போது வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரையும் கவனித்த சூர்யா தண்ணி அடிப்பதை நிறுத்தும்படி அட்வைஸ் செய்திருக்கிறார். அதோடு, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதின் அவசியம் பற்றியும் லெக்சர் அடித்திருக்கிறார். இதை பிரேம்ஜியே பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment