பிரசவ நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது போன்று ஆண்களுக்கும் இனிமேல் விடுமுறை வழங்கலாம் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
பிரசவ நேரத்தின் போது லண்டனில் பெண்களுக்கு 50 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனை கணவன் மற்றும் மனைவி இருவரும் 25 – 25 வாரங்களாக பிரித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தால் ஆண்டுதோறும் 2,85,000 தம்பதிகள் பயனடைவார்கள் என்று அந்நாட்டின் துணை பிரதமர் நிக் கூறியுள்ளார்.
அவர் மேலும், ’பெரும்பாலும் குழந்தைகளை தாய்மார்கள் மட்டுமே கவனித்து வளர்த்து வருகின்றனர். ஆண்களும் தங்களின் குழந்தையை அருகில் இருந்தே கவனித்துக் கொள்ள விரும்புவதாகவும், இந்த முடிவால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைவார்கள்’ என்று கூறினார்.

No comments:
Post a Comment