விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் மா.கா.பா ஆனந்த்.
சின்னத்திரையில் இருந்த இவர் வானவராயன் வல்லவராயன் படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு தம்பியாக நடித்தார். தற்போது அட்டி, பஞ்சுமிட்டாய், நவரச திலகம் போன்ற படங்களில் நாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார். அதில் ஒரு பகுதியில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை கிண்டல் செய்துள்ளனர். அதோடு அஜித் தோற்றத்தையும் கிண்டல் செய்தனர். இது அஜித் ரசிகர்களிடையே மிகவும் கோபத்தை உண்டாக்கியது.
இதனால், டுவிட்டரில் மா.கா.பா ஆனந்தை கடுமையாக திட்ட, அவர் ’இதில் என் தவறு ஏதும் இல்லை, உங்கள் கோபம் எனக்கு புரிகிறது, ஆனால், என்னை திட்டுவதில் எந்த பயனும் இல்லை’ என்று மிகவும் மனம் நொந்து டுவிட் செய்துள்ளார். தற்போது அந்த டுவிட்டை அவர் டெலிட் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment