பேராண்மை படத்துக்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பின் ஜனநாதன் இயக்கியுள்ள படம் ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோரது நடிப்பில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டபோது இப்படத்தின் பெயர் - புறம்போக்கு.
இந்த தலைப்புக்கு தணிக்கையில் ஏதாவது பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு என்பதால் தற்போது புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என்று மாற்றி உள்ளனர். யுடிவி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை மே 1 ஆம் தேதி அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக படத்தின் புரமோஷன் வேலைகளைத் தொடங்க திட்டமிட்டு குறிப்பிட்ட தேதியை தீர்மானித்தனர் படக்குழுவினர்.
குறிப்பிட்ட அந்த தேதியில் புரமோஷனுக்கு வர ஆர்யா, ஷாம் இருவரும் ஒப்புக்கொண்டுவிட்டனர். ஆனால் விஜய்சேதுபதி மட்டும் வர மறுத்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, புரமோஷனுக்கு வந்தால் என் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிடுவேன் என்றும் எச்சரிகை செய்தாராம்.
என்னாச்சு.. விஜய்சேதுபதிக்கு? என்று விசாரித்தால், மூன்று ஹீரோக்கள் கதையான இந்தப் படத்தில் மூன்று பேருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று சொன்ன இயக்குநர் ஜனநாதன் கடைசியில் விஜய்சேதுபதியை டம்மியாக்கியதுபோல் அவருடைய காட்சிகளை குறைத்துவிட்டாராம்.
டப்பிங் பேசும்போது இந்த விஷயம் விஜய்சேதுபதிக்கு தெரிய வந்ததும் கடுப்பாகிவிட்டாராம். அதனாலேயே புரமோஷனுக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டாராம் விஜய் சேதுபதி.

No comments:
Post a Comment