Wednesday, 18 February 2015

"The Breakfast Club" - ன் சவால்…!


லண்டனிலுள்ள "தி பிரேக்பாஸ்ட் கிளப்" எனும் உணவு விடுதி இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. 12 நிமிடங்களுக்குள் 12 பான் கேக்குகளை (Pancake) உட்கொள்வதுதான் இப்போட்டியின் சவால்.
போட்டியாளர்கள் 12 நிமிடங்களுக்குள் 12 பான்கேக்குகளை உட்கொண்டால் அவ்வுணவு அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். போட்டியாளர்கள் தோல்வியுற்றால் முழுக்கட்டணத்தையும் 17.5 ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் 3500 ரூபா) அவர்கள் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் கிடைக்கும் லாபம் முழுவதையும் அறக்கட்டளையொன்றுக்கு வழங்க மேற்படி உணவு விடுதி தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் ஹங்க்ரி ரொனின் என அழைக்கப்படும் நபர் 12 பான் கேக்குகளையும் 5 நிமிடங்களில் உட்கொண்டு முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட போட்டிகளின்போது 9400 பான் கேக்குகள் பரிமாறப்பட்டதாக மேற்படி விடுதி அதிகாரியான ஹேய்லி சிம்ஸன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment