தன்னுடைய துறு துறு செய்கையாலும், கலகல பேச்சாலும் தமிழ் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகம் எங்கு வாழும் பல தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவருக்கு சின்ன வயதில் பேச்சே வராதாம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆமாம், இவருக்கு சிறு வயதில் பேசவே வராதாம். இதை டிடியே ஒரு நிகழ்ச்சி மேடையில் தெரிவித்துள்ளார். ஆனால் இன்று தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் வரும் விருந்தினர்களை பேச விடாமல் அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு கலங்கடித்து விடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர்-1, காபி வித் டிடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் இவரை விட கெட்டிக்காரர் யாரும் இல்லை. ’காஃபி வித் டிடி’யில் காஃபி கொடுத்தே எல்லா பிரபலங்களிடமும் பதில்களை லாவகமாக வாங்குவதில் கெட்டிக்காரர்.
இவர் பேசும் பேச்சும், இவர் அடிக்கும் கமெண்ட்டுக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் இவர் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்யதுகொண்டார். தமிழ் நாட்டின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் தொடர்ந்து 4 வருடங்களாக சிறந்த தொகுப்பாளர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.
தொகுப்பாளராக மட்டுமில்லாமல் சுற்றுலா துறைக்கான பிரிவில் முன்னணி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் டிடி க்கு இன்று பிறந்த நாள். அவருக்கு எங்கள் தமிழ் உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment