திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் த்ரிஷாவிற்கு சமீபத்தில் தான் தயாரிப்பாளர் வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது. இதனால் நடிகை த்ரிஷா நடிப்புக்கு முழுக்க போட்டு விடுவார் என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தான் அதிகமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் த்ரிஷா. அவர் சமீபத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட படம் போகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிக்கின்றனர்.
இப்படம் முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்டது. எந்த இலக்கும் இல்லாமல் பயணிக்கும் மூன்று பெண்கள் பற்றிய கதைதான் படத்தின் மையக்கரு. இமான் இசையமைக்கும் இப்படத்தை பாண்டியன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அருண்குமார், மந்த்ரா நடித்த 'ப்ரியம்' படத்தை இயக்கியுள்ளார்.
இதைத்தவிர 'என்னை அறிந்தால்', 'பூலோகம்', 'அப்பா டக்கரு', 'லயன்', 'ரம்', 'போகி' என வரிசையாக நடித்து வருகிறார் த்ரிஷா. இதில் என்னை அறிந்தால் படமும், பூலோகம் படமும் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

No comments:
Post a Comment