Wednesday, 4 February 2015

செல்ஃபி எடுத்து விமானத்தை விபத்தில் தள்ளிய பைலட்!!


அமெரிக்காவில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்தில் 2 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஒரு சிறிய விமானம் தரையில் விழுந்து விபத்துக்குளானது. இதில் விமானி அம்ரித் சிங்கும் மற்றும் உடன் பயணித்த ஒரு பயணியும் பலியாகினர்.
இது குறித்து பல கட்ட விசாரணைகள் நடைபெற்றது. இதில் தற்போது விமானியின் அறையில் இருக்கும் கேமரா மூலம் விடை கிடைத்துள்ளது.
விமானி அம்ரித் சிங் தனது செல்போன் மூலம் விதவிதமாக செல்ஃபி எடுத்த போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment