அஜித் பட வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்திருக்கிறது ’என்னை அறிந்தால்’. கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் தயாராகியுள்ள படம் என்னை அறிந்தால். இப்படம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவரை அஜித் நடித்த படங்கள் உலகம்மெங்கும் 1000 தியேட்டர்களைக் கூட எட்டியதில்லை. முதன்முறையாக, இப்படம் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இப்படத்திற்கு தமிழகத்தைத் தாண்டியும் அதிகமான தியேட்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது - என்னை அறிந்தால். கேரளாவில் மட்டும் 200 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அஜித் படத்தைப் பொறுத்தவரை கேரளாவில் இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை. பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவரான எம்.ஜி.நாயர் என்பவர் என்னை அறிந்தால் படத்தின் கேரள விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார்.
என்னை அறிந்தால் படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை அட்மாஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அங்கே 100 திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அட்மாஸ். அமெரிக்காவைப்பொருத்தவரை இதுவும் அஜித் படங்களில் உச்சபட்ச எண்ணிக்கையாகும். அதேபோல் யுகேவில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது ஐங்கரன் நிறுவனம். அது மட்டுமல்ல, இதுவரை தமிழ்ப்படங்களே வெளியிடப்படாத அதே நேரம் தமிழர்கள் வசிக்கும் பல வெளிநாடுகளிலும் என்னை அறிந்தால் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

No comments:
Post a Comment