இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட்டிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று திருடர்களுக்கு நன்றாகத் தெரிந்த்திருக்கிறது. பட்டப்பகலில், சமயம் பார்த்து, திறந்த வீட்டினுள், ஆள் இருக்கும் போதே 15 சவரன் நகைகளை ஆட்டையைப் போட்டுள்ளனர் திருடர்கள்.
நேற்றைய முந்தினம், 15ம் தேதி, இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் நடந்தது. இந்த மேட்சை, இந்தியாவின் மூலை முடுக்கில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும், நேரடி ஒளிபரப்பு மூலம் வீட்டில் இருந்தபடி தொலைகாட்சியில் உட்கார்ந்து பார்த்து ரசித்தனர்.
பள்ளிக்கூடம், வேலை இருக்கும் நாட்கள் என்றாலே வேலைக்கும், பள்ளிக்கூடத்திற்கும் லீவு போட்டு விட்டு மேட்ச் பார்க்கும் கூட்டம் நம் ரசிகர் கூட்டம். இந்த நிலையில், ஞாயிற்று கிழமை மேட்ச் அமைந்து விட்டது.
விடுவாங்களா கிரிக்கெட் வெறியர்கள். ஞாயிற்றுக்கிழமை காலையில் 7:30க்கு உட்காந்தவர்கள், மாலை வரை அசையவே இல்லை. இப்படி வீடை திறந்துப் போட்டு விட்டு, மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், 15 சவரன் நகைகளை பறிகொடுத்துள்ளார்.
சென்னை கே. கே. நகர் நடேசன் நகரைச் சேர்ந்த வத்சன் என்ற 33 வயது சாப்ட் வேர் என்ஜினியர் தான் அந்த அப்பாவி கிரிக்கெட் வெறியர். இவர் நேற்று முந்தினம் வீட்டின் கதவுகளை திறந்தவாறே வைத்து விட்டு இந்தியா – பாகிஸ்தான் மேட்சை பர்த்துக் கொண்டு இருந்தாராம்.
போட்டி முடியும் வரை அசையாமல் இருந்த இவர், சுபமாக மேட்ச் முடிந்ததும், சந்தோஷமாக தூங்குவதற்காக பெட்ரூம் சென்றுள்ளார். அங்கு, பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு பதறிப்போய், உள்ளே இருந்த நகை பணங்களை சரிபார்த்துள்ளார்.
அப்போது தான், தன் கிரிக்கெட் ஆர்வத்தை பயன்படுத்தி திருடர்கள் நகைகளை பதம் பார்த்தது அவருக்கு தெரியவந்துள்ளது. இந்த திருட்டு குறித்து கே.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளாராம், வத்சன்.
இந்த புகாரை ஏற்ற போலீசார், வீட்டில் ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிவருகின்றனராம்.

No comments:
Post a Comment