Tuesday, 17 February 2015

வியப்பில் விழி உயர்த்த வைத்த சம்பவம்…!


ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய போது தலிபான்களின் குண்டுத்தாக்குதலில் கடும் காயத்துக்குள்ளாகி இரு கால்களையும் இழந்து கோமா மயக்க நிலையில் 4 மாதங்களை கழித்த பிரித்தானிய படை வீரர் ஒருவர் குணமடைந்து தினசரி ஒரு மைல் தூரம் நடக்கக்கூடிய ஆற்றலைப்பெற்று அனைவரையும் வியப்பில் விழி உயர்த்த வைத்துள்ளார்.
8 வருடங்களுக்கு முன்னர் தலிபான்களின் குண்டுத்தாக்குதலில் பென் பார்கின்ஸன் (30வயது) என்ற மேற்படி படை வீரரின் உடலில் 40க்கு மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டிருந்தன. இதன் போது அவர் உயிர் பிழைப்பது சந்தேகம் என கருதப்பட்டது.
இந்த தாக்குதலில் அவர் இரு கால்களையும் இழந்ததுடன் அவரது முதுகு இடுப்பு உள்ளடங்களான பகுதியிலுள்ள எலும்புகள் சேதமடைந்தன. அதே சமயம் அவரது மூளையிலும் சேதம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் மருத்துவர்கள் அவரது தசைகளையும் சேதமடைந்த இழையங்களையும் மீண்டும் விருத்தி செய்வதற்கு ஆக்ஸிஜன் வாயு சிகிச்சையை வழங்கினர். தற்போது பென் அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக அவரது தாயார் டியனி டெர்னி (57வயது) தெரிவித்தார்.

No comments:

Post a Comment