தன்னை சந்திக்க வரும் இளம் நடிகர்களுக்கு டீ கொடுக்கிறாரோ இல்லையோ.. ஆனால் அட்வைஸ்களை மட்டும் தனது சார்பில் அள்ளி அள்ளி கொடுப்பார் விஜயகாந்த்.
அப்படி தான் ரொம்ப வருடத்துக்கு முன்னாள் நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் இப்போது வெளியே கசிந்திருக்கிறது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த ஒரு படத்தில் நடித்த போது, அவர் நடித்துக்கொண்டிருந்த ஸ்பாட்டுக்கு அருகில் இருந்த ஜெயம்ரவி, விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தாராம்.
அப்போது ஜெயம் ரவியின் படங்களில் தனக்கு பிடித்ததையும், அவரது ப்ளஸ்களையும் சுட்டிக்காட்டிய விஜயகாந்த், குரல்தான் உனக்கு மைனசாக உள்ளது. உன் உருவத்திற்கேற்ப அதுவும் கம்பீரமாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொன்னாராம். அதோடு, தினமும் காலை எழுந்ததும் மெரினா பீச் போன்று எங்காவது சென்று சத்தமாக கத்துமாறு அவரிடம் சொன்னாராம்.
அதையடுத்து, அவர் சொன்னதை ஏற்று சுமார் ஒரு வாரம் மெரினா பீச்சுக்கு அதிகாலையே சென்று சத்தமாக கத்தினாராம் ஜெயம்ரவி. ஆனால், பின்னர் அந்த பழக்கத்தை விட்டு விட்டாராம். இருப்பினும், இப்போதும் அவ்வப்போது அந்த பயிற்சியை அவர் செய்து கொண்டிருக்கிறாராம். இந்த தகவல் இப்போது தான் வெளியே கசிந்திருக்கிறது.

No comments:
Post a Comment